Dhanush Fans Help for Poor Lady
Dhanush Fans Help for Poor Lady

14 வருடம் படுக்கையில் இருந்த பெண்ணின் கனவை தனுஷ் ரசிகர்கள் நிறைவேற்றியுள்ளனர்.

Dhanush Fans Help for Poor Lady : சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

தனுஷ் நாளை ஜூன் 28 தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதற்காக அவரது ரசிகர்களும் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றனர்.

மேலும் வறுமை இல்லாத மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர். 100 குடும்பங்களை தத்தெடுத்து அவர்களுக்கு உதவி வருகின்றனர்.

அந்த நூறு குடும்பத்தில் ஒருவரும் குடும்பமாக சூர்யா என்ற பெண்ணின் குடும்பத்தையும் தேர்ந்தெடுத்துள்ளனர்.

பட்ஜெட் 14 கோடி, வசூலும் லாபமும் எவ்வளவு தெரியுமா? – மிரள வைக்கும் படையப்பா படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்.!

14 வருடத்திற்கு முன்பு நடந்த ஒரு விபத்தில் தனது கழுத்துக்குக் கீழே உணர்வுகளை இழந்துள்ளார் சூர்யா. இத்தனை வருடங்களாக அவர் படுக்கையிலேயே இருந்து வருகிறார்.

பலவித பிரச்சனைகளில் சிக்கி தவித்து வருகிறார். இந்த விஷயத்தை அறிந்த தனுஷ் ரசிகர்கள் அவர்களுக்கு ஒரு மாத மளிகைப் பொருட்களை வழங்கியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் சூரியா உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். இதனால் அதிநவீன வசதி கொண்ட ரூபாய் 16 ஆயிரம் மதிப்புள்ள பெட்டை அவருக்கு வழங்கி அவரின் ஆசையை நிறைவேற்றியுள்ளனர் தனுஷ் ரசிகர்கள்.

தனுஷ் ரசிகர்களின் இந்த செயல் அனைவரிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

https://twitter.com/DhanushFc/status/1287341661740130305?s=19