Dhanush Expectations on Narappa

13 வருடங்களுக்குப் பிறகு அதே மாதிரி மீண்டும் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு தனுஷிடம் அதிக அளவில் குடிகொண்டுள்ளது.

Dhanush Expectations on Narappa : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக பல பல திரைப் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் ஆகிய திரைப்படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றது. ‌‌

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை அடுத்து இந்தப் படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. இந்த ரீமேக் படத்தில் தனுஷ் க்கு பதிலாக வெங்கடேஷ் நடித்துள்ளார். படத்தினை நேரடியாக OTT-ல் வெளியிடலாம் என படக்குழு முடிவெடுத்தது. ஆனால் வெங்கடேஷ் ரசிகர்கள் இதற்கு மிகுந்த எதிர்ப்பு தெரிவித்ததால் தயாரிப்பாளர் இந்த முடிவை மாற்றிக் கொண்டுள்ளார்.

12 பாவங்களுக்கு, மன்னிப்பு கிடையாது.!

பல வருடங்களுக்குப் பிறகு வெங்கடேஷ் நடிப்பில் வெளியான படத்தை தமிழில் செல்வராகவன் யாரடி நீ மோகினி என்ற பெயரில் ரீமேக் செய்தார். தனுஷ் நடிப்பில் வெளியான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

அஜித்தின் படங்கள் OTT-யில் வெளியாகியுள்ளதா.? என்னென்ன படங்கள் இதோ | Trending News | Ajith | Viral HD

தற்போது 13 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான படத்தை வெங்கடேஷ் ரீமேக் செய்து நடித்துள்ளார். அவர் படத்தை ரீமேக் செய்து முடித்த போது தனக்குக் கிடைத்த அதே வெற்றி தன்னுடைய படத்தை வெங்கடேஷுக்கு ரீமேக் செய்து நடிக்கும் போது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு தனுஷிடம் அதிக அளவில் குடிகொண்டுள்ளது.

நாரப்பா படத்தின் ரிலீஸ் தேதியை தனுஷ் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.