மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கவுள்ளார் நடிகர் தனுஷ்.

Dhanush Direction Next Movie Updates : தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான இவர் தற்போது ஹாலிவுட் பாலிவுட் என உலகப் புகழ்பெற்ற நடிகராக வலம் வருகிறார்.

மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் தனுஷ்.. ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா? வெளியான முழு விவரம்

மேலும் நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல் பா பாண்டி படத்தை இயக்கி இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். இந்த படத்தைத் தொடர்ந்து தற்போது மீண்டும் இயக்குனராக படத்தை இயக்கவுள்ளார்.

தயாரிப்பாளர் மற்றும் பைனான்சியர் என பன்முகத்திறமை கொண்ட அன்புச்செழியன் அவர்கள் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. தனுஷ் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் அவரே ஹீரோவாகவும் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் தனுஷ்.. ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா? வெளியான முழு விவரம்

கூடிய விரைவில் இந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. பா பாண்டி படத்திற்கு பிறகு மீண்டும் தனுசை இயக்குனராக பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.