Dhanush Direction 2 :
தனுஷ் படம் ட்ராப்பாகி விட்டதாக தகவல் ஒன்று வெளியாகி இருப்பது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பை தாண்டி தயாரிப்பு, பாடல், நடனம், இயக்கம் என பல திறமைகளை தன்னுள் கொண்டிருப்பவர்.
மேலும் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவர் பா.பாண்டி படத்திற்கு பிறகு தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வரலாற்று படம் ஒன்றையும் இயக்கி நடிக்க கமிட்டாகி இருந்தார்.
முதல் படமே மெகா ஹிட் என்பதால் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
ஆனால் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் நிதி நெருக்கடியால் இந்த படத்தை கை விட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் இப்படத்திற்கு புதிய தயாரிப்பாளர் யாராவது கிடைத்தால் தான் இந்த படம் மீண்டும் தொடங்கும். இல்லையென்றால் கிடப்பில் தான் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அறிவித்து இருந்த சங்கமித்ரா படமும் கிடப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.