இப்போதைக்கு செல்வராகவனிடம் படம் இல்லை என தனுஷ் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

Dhanush Decision on Selvaraghavan Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக கர்ணன் என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் வரும் ஜூன் 18-ஆம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் வெளியாகிறது.

கர்ணன் படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு ஹாலிவுட் படத்திற்காக அமெரிக்கா சென்ற தனுஷ் அங்கே படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். படப்பிடிப்பு முடிந்ததும் சென்னை திரும்பியதும் இவர் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இப்போதைக்கு செல்வராகவனுடன் படம் இல்லை.. தனுஷ் எடுத்த அதிர்ச்சி முடிவு - என்ன காரணம் தெரியுமா??

ஆனால் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து நடித்து வரும் சாணி காகிதம் படத்தின் படப்பிடிப்புகள் லாக் டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளது.

இதன் காரணமாக நடிகர் தனுஷ் நானே வருவேன் படத்திற்கு கொடுத்த கால்சீட்டை அப்படியே மித்ரன் ஜவகருக்கு கொடுத்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. செல்வராகவன் படத்தில் நடித்து முடித்த பிறகு நானே வருவேன் படத்தை இயக்குவார் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.