Dhanush Decision on Jagame Thandhiram Release
Dhanush Decision on Jagame Thandhiram Release

தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட கூடாது என ஜகமே தந்திரம் பட ரிலிஸில் தனுஷ் ஒரு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Dhanush Decision on Jagame Thandhiram Release : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் ரிலீஸ் பரவிவரும் குரானா வைரஸ் தாக்கம் காரணமாக தள்ளிப் போயுள்ளது. தியேட்டர்கள் திறக்க இன்னும் நாளாகும் என்பதால் இப்படத்தை OTT வழியாக நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

தயாரிப்பாளர் நஷ்டம் அடையக் கூடாது என்பதற்காக தனுஷூம் இந்த முடிவிற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்பட்டு வந்தது.

ஆனால் இது குறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது. OTT வழியாக ஜகமே தந்திரம் படம் வெளியாக இருப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தியேட்டர்கள் திறக்கப்பட்ட உடன் தான் இப்படம் வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது.