தனுஷின் D 50 திரைப்படத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகை மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டு மாபெரும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் தனுஷ். இவர் வாத்தி திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏராளமான நட்சத்திர பட்டாள்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் பரபரப்பாக இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிக்க இருக்கும் D50 திரைப்படம் குறித்த அப்டேட்களும் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடிக்க இருக்கும் அப்படத்திற்கு D50 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பை படக்குழு சமீபத்தில் அறிவித்து இருந்ததை தொடர்ந்து இதில் சந்திப் கிஷன், துஷாரா விஜயன், விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராம் மற்றும் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக புதிய தகவல் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இதனைத் தொடர்ந்து இப்படத்தில் கதாநாயகியாக நடிகை த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது புதிய அப்டேட்டாக இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் பாலிவுட் நடிகையான கங்கணா ரணாவத்திடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஆனால் அவர் தற்போது பிஸியாக இருப்பதால் இப்படத்தில் நடிக்க நோ சொல்லி மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன் பிறகு தான் இப்படத்தில் நடிகை திரிஷா கமிட்டாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.