Dhanush croons for Asuran : Manju Warrier, Vetrimaaran, Dhanush, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

இப்படத்தில் ஒரு பாடலை தனுஷ் பாடியிருப்பதாக படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷின் ஜெயில் படத்திலும் தனுஷ் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush croons for Asuran :

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் அசுரன். கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். பூமணியின் வெக்கை எனும் நாவலை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் பிஸி நடிகரான ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அண்மையில் நிறைவுக்கு வந்தது.

எலுமிச்சை உங்களை அழகாக்குமா? தெரிந்துகொள்வோமா!.

இதைதொடர்ந்து பின் தயாரிப்பு வேலைகளையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறையில் வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு பாடலை தனுஷ் பாடியிருப்பதாக படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷின் ஜெயில் படத்திலும் தனுஷ் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் பாடல் பணிகளுக்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தூக்கம் தொலைத்து வேலை பார்த்து வருவதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.