Dhanush And Sivakarthikeyan Heroines Arrest – Drugs Issue
Dhruv Vikram‘s Latest Look : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவருடைய ஒரே மகன் துருவ் விக்ரம்.
தமிழ் சினிமாவில் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். அர்ஜுன் ரெடி படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகியிருந்தது. படத்தில் துருவ் விக்ரமின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இந்த நாள் ரசிகர்கள் அனைவரும் புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என படத்தை பாராட்டி வந்தனர்.
ஆதித்ய வர்மா படத்தை தொடர்ந்து துருவ் அடுத்ததாக தன்னுடைய அப்பா சியான் விக்ரமுடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்திற்காக தொடர்ந்து உடலை பிட்டாக்கி வருகிறார். தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது செப்டம்பர் மாதம் லுக் என புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.