தனுஷ் மற்றும் ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இணையவுள்ள படத்தின் தலைப்பு என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
Dhanush and Ratchasan Movie Title : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். தொடர்ந்து வித்தியாச வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் அடுத்ததாக கர்ணன், கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் ஆகியவை வெளியாக உள்ளன. மேலும் ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படம் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு வால் நட்சத்திரம் என தலைப்பு வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.