தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் இணையும் படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Dhanush and Mari Selvaraj New Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இது படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வந்தபோது மீண்டும் இருவரும் இணைவது குறித்து ஆலோசனை செய்தனர். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி அடைந்து விட்டதால் தற்போது இவர்கள் இருவரும் இணைவது உறுதியாகியுள்ளது.

இதனால் இது கர்ணன் படத்தின் இரண்டாம் பாகமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில் தற்போது இதுகுறித்த தகவல் கிடைத்துள்ளது.

இது கர்ணன் படத்தின் இரண்டாம் பாகம் அல்ல. மாரி செல்வராஜ் ஒரு புதிய கதையை தனுஷ்க்கு கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‌