Dhanush 40
என் வாழ்க்கையில் இது தான் முதல் முறை என தனுஷ் 40 பற்றி மகிழ்ச்சியாக ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார் தனுஷ்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் பட்டாஸ் படம் மட்டுமில்லாமல் காரத்திக் சுப்புராஜ் இயக்கத்திலும் தனுஷ் 40 என்ற படத்தில் நடித்து வந்தார்.

லண்டனில் படு ஜோராக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் தமிழகத்திலும் நடந்தது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிந்து விட்டதாகவும் நான் மிக வேகமாக நடித்து முடித்து கொடுத்த படம் இது தான் என தனுஷ் ட்வீட் செய்துள்ளார்.

தனுஷின் டீவீட்டிற்கு நன்றி கூறி தனக்கும் இது ஒரு சிறந்த அனுபவம் என குறிப்பிட்டுள்ளார் காரத்திக் சுப்புராஜ்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.