துணிவு பட இயக்குனரின் கதையில் இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் தனுஷ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக பலம் இருப்பவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றியை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வாத்தி, கேப்டன் மில்லர் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன. மேலும் நடிகர் தனுஷ் பல இயக்குனர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடிக்க உள்ளார்.

துணிவு பட இயக்குனரின் அடுத்த படத்தில்… இதுவரை ஏற்காத கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் தனுஷ்.!

இப்படியான நிலையில் தற்போது நடிகர் தனுஷ் அடுத்ததாக இயக்குனர் எச் வினோத்துடன் இணைய இருப்பதாக தகவல் சமீபத்தில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து இப்படத்தின் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

துணிவு பட இயக்குனரின் அடுத்த படத்தில்… இதுவரை ஏற்காத கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் தனுஷ்.!

அதன்படி இப்படம் ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாக இருப்பதாகவும், இப்படத்தில் தனுஷ் இதுவரை ஏற்காத கதாபாத்திரமான போலீஸ் கதாபாத்திரத்தில் முதல்முறையாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு விரைவில் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.