தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்துக்கு காரணம் என்ன என்பது பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.

Dhanush Aishwarya Divorce Reasons : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக மாறன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தனுஷ் திருமணமாகி 18 வருடங்கள் ஆன நிலையில் தன்னுடைய மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இவருடைய இந்த அறிவிப்பு ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து இந்த நடிகை தான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்

இப்படியான நிலையில் தற்போது தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்துக்கு காரணம் என்ன என்பது பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளன.

அதாவது தங்கமகன் படத்திற்கு பிறகு தனுஷ் மற்றும் சமந்தா இடையே நெருக்கம் அதிகரித்தது இவர்களின் விவாகரத்துக்கு காரணம் என சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு பிறகு தனுஷ் வாழ்க்கையில் மனக் கசப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

சமந்தா தன்னுடைய கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த போதும் இந்த விவாகரத்துக்கு பின்னணியில் தனுஷ் இருப்பதாக பேசப்பட்ட நிலையில் தற்போது தனுஷின் விவாகரத்து பின்னணியில் சமந்தா இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து இந்த நடிகை தான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்

அதுமட்டுமல்லாமல் போயஸ்கார்டனில் இடம் வாங்கி வீடு கட்டும் ஆறு ரஜினிகாந்த் வற்புறுத்தியதாகவும் இதனால் கடன் சுமையால் சிக்கித் தவித்த தனுஷிற்கு அவர் எந்தவித உதவியும் செய்யாததும் இந்த விவாகரத்துக்கு காரணம் எனச் சொல்லப்படுகிறது.

இது போன்று பல்வேறு காரணங்கள் சமூக வலைதளங்களில் வலம் வரத் தொடங்கியுள்ளன. ஆனால் உண்மை என்ன என்பது சம்பந்தப்பட்டவர்கள் மனம் திறந்தால் தான் தெரியும்.