நம்ப முடியவில்லை மனசு உடைஞ்சு போச்சு என அசுரன் பட நடிகர் நித்தீஷ் மரணம் குறித்து தனுஷ் பதிவிட்டுள்ளார்.

Dhanush About Nitish Death : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் நாளுக்கு நாள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதே சமயம் பல திரையுலக பிரபலங்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருவது தொடர் கதையாகி வருகிறது.

நம்ப முடியவில்லை மனசு உடைஞ்சு போச்சு.. அசுரன் படம் நடிகர் நித்தீஷ் மரணம் குறித்து தனுஷ் பதிவிட்ட பதிவு.!!

நேற்று அசுரன், புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் நித்தீஷ் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் தற்போது நடிகர் தனுஷ் இவருடைய மறைவு குறித்து பதிவு செய்துள்ளார். மனது உடைந்து விட்டது, நம்ப முடியவில்லை என தெரிவித்துள்ளார்.