நடிப்புக்கு டாட்டா கூற இருப்பதாக தனுஷ் கூறியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Dhanush About His Direction : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் ஜூன் 18-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சசிகாந்த் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் நேரடியாக நெட்ஃபிக்ஸ் இணையதளம் வழியாக வெளியாக உள்ளது.

நடிப்புக்கு டாட்டா.. தனுஷ் எடுத்த அதிரடி முடிவு - ரசிகர்கள் அதிர்ச்சி

இந்த படம் பற்றி‌ நடிகர் தனுஷ், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் ட்விட்டர் இணையதளத்தில் உரையாடினர்.

அப்போது விரைவில் இயக்குனராக இருப்பதாக தெரிவித்தார். தற்போது கார்த்திக் சுப்புராஜ், ராம்குமார், என்ன திறமையான 3 இயக்குனர்களுடன் பணியாற்றி வருகிறோம். மூன்று வருடங்களுக்கு பிஸியாக இருப்பேன். அதைப் பின்னர் முழுநேர இயக்குனராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.