தனுஷ் 44 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது.

Dhanush 44 Pooja : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக மாறன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜி வி பிரகாஷ் இசையில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பெரிய பலன்கள் தரும், சின்னச் சின்ன பரிகாரங்கள்.!

இப்படத்தை தொடர்ந்து தனுஷ் அடுத்ததாக மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். தனுஷ் 44 என்ற தற்காலிக பெயரோடு அழைக்கப்படும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.

தள்ளிப்போன Valimai ரிலீஸ் தேதி! – ஏமாற்றத்தில் ரசிகர்கள்

இந்த படத்தின் படப்பிடிப்புகள் இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளன. படத்தின் பூஜையில் தனுஷ், பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே லைக்குகளைக் குவித்து வருகிறது.