Dhanush 44
தனுஷ் 44 படத்தின் இயக்குனர் யார் என்பது பற்றிய தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது பட்டாஸ் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மட்டுமில்லாமல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

இந்த படங்களை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடிக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது, ஆனால் அந்த படத்தின் இயக்குனர் யார் என்பதை அறிவிக்கவில்லை.

இதனால் தனுஷ் 44 படத்தின் இயக்குனர் யாராக இருக்கும் என்ற கேள்வி அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் எழுந்திருந்தது.

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி தனுஷ் 44 படத்தை தனுஷ் தான் இயக்க உள்ளாராம். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

தற்போது அந்த படத்தை தான் சன் பிக்சர்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றிய அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும். அதன் பின்னர் தனுஷ் 44 இயக்குனர் தனுஷே தானா என்பது உறுதியாக தெரிந்து விடும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.