கதை திரைக்கதை வசனம் என அனைத்தையும் தமிழ் கவனிக்க தனுஷ் 44 படத்தை மட்டும் வேறு ஒருவர் இயக்கவிருக்கிறார்.

Dhanush 44 Director Details : தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல திறமைகளைக் கொண்டு வலம் வருபவர் தனுஷ்.

இவரது நடிப்பில் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

சூரரைப் போற்று படத்திற்கு சென்சார் முடிந்தது – முழு விவரம் இதோ!

அதுமட்டுமல்லாமல் கார்த்திக் வேற இயக்கத்தில் சத்யஜோதி பலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படங்களை தொடர்ந்து அவர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள தனுஷ் 44 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடிக்க இருந்த திரைப்படம் தான் இந்த படம்.

அந்நிறுவனம் நிதி பற்றாக்குறையால் இப்படத்தை கைவிட்டு விட்டதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதனை கைப்பற்றியுள்ளது.

இந்த படத்திற்கு தனுஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி விட்ட நிலையில் படத்தை மட்டும் வேறு ஒரு இயக்குனர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அந்த இயக்குனர் வேறு யாருமில்லை மித்ரன் ஜவஹர் தான் என்பதும் தெரிய வந்துள்ளது.

எல்லாம் கைகூடி இறுதியில் இப்படியா நடக்கணும்?? தளபதி 65 படத்தை வெற்றிமாறன் இயக்காதற்கு இதுதான் காரணம் – வெளியான ஷாக்கிங் தகவல்.!

மித்ரன் ஜவஹர் இதற்கு முன்னதாக தனுஷின் யாரடி நீ மோகினி, குட்டி மற்றும் உத்தம புத்திரன் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை இந்த கூட்டணி உறுதியாகி விட்டால் இவர்கள் இணையும் நான்காவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.