Dhanush 43 Movie Director Update
Dhanush 43 Movie Director Update

மாபியா படம் பார்த்து விட்டு தனுஷ் அப்செட் ஆனதால் கார்த்திக் நரேனுக்கு பதிலாக இயக்குனரை மாற்றிவிட்டதாக வெளியான தகவலுக்கு படக்குழு விளக்கமளித்துள்ளது.

Dhanush 43 Movie Director Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் மற்றும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.

இந்தப் படங்களைத் தொடர்ந்து தனுஷ் 43 படத்திற்காக கார்த்திக் நரேன் உடன் கூட்டணி அமைத்து இருந்தார். சத்யஜோதி பலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இப்படம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது‌.

இந்த படத்தில் கதையை உருவாக்கும் வேலையில் கார்த்திக் நரேன் இறங்கியிருந்தார். இந்த நிலையில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா ஆகியோர் நடிப்பில் வெளியான மாபியா படத்தை பார்த்துள்ளார்.

அருவா படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய்? – படக்குழு விளக்கம்

இப்படம் தோல்வியை தழுவியதால் கொஞ்சம் ஜெர்க் ஆன தனுஷ் Dhanush 43 படத்தை இயக்கும் வாய்ப்பை கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கு அளித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

தற்போது இதற்கு படக்குழு விளக்கம் அளித்துள்ளது. அதாவது தனுஷ் 43 பழத்தின் இயக்குனரான கார்த்திக் நரேனை மாற்றி விட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல என தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும் திட்டமிட்டபடி கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தனுஷ் 43 திரைப்படம் உருவாகும் எனவும் தெரிவித்துள்ளது.