D40
வீடியோ ஒன்றின் மூலமாக தனுஷ் 40 படத்தின் டைட்டில் என்ன என்பது கசிந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் அடுத்ததாக பட்டாஸ் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷின் 40-வது படமான இந்த படத்திற்கு சுருளி என பெயர் வைக்கப்பட்டு இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வைரலாகின.

ஆனால் படத்தின் டைட்டில் சுருளி இல்லை என படக்குழு மறுப்பு தெரிவித்தது, இந்நிலையில் தற்போது ரிலைன்ஸ் நிறுவனம் 2020-ல் தங்களுடைய விநியோகிஸ்தம் மற்றும் தயாரிப்பு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் தனுஷ் படத்தின் டைட்டில் சுருளி என்று தான் குறிப்பிட்டுள்ளனர். அப்போ டைட்டில் சுருளி தான் என்பதும் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்க இது டைட்டில் இல்லை என ஏமாற்றியுள்ளது என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.