பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார் என தெரிய வந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசன் 21 போட்டியாளர்களுடன் தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

எதிர்பாராத டுவிஸ்ட்.. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட முக்கிய பிரபலம் - ரசிகர்கள் ஏமாற்றம்.!!

முதல் வாரத்தை தவிர்த்து இரண்டாவது வாரத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்று இருந்தவர்களில் தனலட்சுமி, ஷிவின் மற்றும் ரக்ஷிதா உள்ளிட்டவர் குறைந்த ஓட்டுக்களை பெற்றிருப்பதாக தகவல் வெளியானது.

தனலட்சுமி வெளியேற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

எதிர்பாராத டுவிஸ்ட்.. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட முக்கிய பிரபலம் - ரசிகர்கள் ஏமாற்றம்.!!

காரணம் சண்டை சச்சரவு என இதுவரை கண்டன்ட் கொடுத்து வந்த தனலட்சுமி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டால் இனி சுவாரசியம் குறைந்துவிடும் என பலரும் கருத்து கூறி வருகின்றனர்.