விஜயால் ரூ 500 கோடி காலெக்ஷன் கொடுக்க முடியும் என கூறி அஜித்தால் கொடுக்க முடியுமா? முடியாதா? எனவும் பேசியுள்ளார் தயாரிப்பாளர் தனச்செயன்.
தமிழ் சினிமாவின் இன்றைய இரு பெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய். தமிழ் சினிமாவை வசூல் ரீதியாக உச்சத்திற்கு கொண்டு செல்வது இவர்களின் படங்கள் தான்.
சமீபத்தில் விஜயின் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் ரூ 300 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது. இந்நிலையில் தற்போது பிரபல தயாரிப்பாளர் தனச்செயன் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
விஜய் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இன்னும் கவனம் செலுத்தினால் அவரால் ரூ 500 கோடி கலெக்ஷனை கொடுக்க முடியும்.
அஜித்தாலும் முடியும். ஆனால் அவர் முதலில் படத்தின் ப்ரோமோஷன்களில் கலந்து கொள்ள வேண்டும். இல்லையேல் எப்படி படத்தை ரீச் செய்ய முடியும், விஜய் சாராவது இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இந்த காலகட்டத்தில் படத்திற்கு ப்ரோமோஷன் ரொம்ப முக்கியம், அஜித் சார் ப்ரோமோஷனுக்கு வந்தால் அவருடைய மார்க்கெட் இன்னும் அதிகரிக்கும் என கூறியுள்ளார்.