Dha Dha 87
Dha Dha 87

Dha Dha 87– 87 வயதில் ஹீரோவானஒரே நடிகர் என்றால் அது சாருஹாசன் தான்.

விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ் என பலர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தாதா 87. மார்ச் 1 தேதி முதல் இப்படம் உலகம் முழுவதும் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் ரிலீசாக உள்ளது.

இந்த படத்தை கலை சினிமாஸ் கலைச் செல்வன் அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. லேண்டர் லீ மார்ட்டி இந்த படத்திற்கு இசையமைக்க ராஜ பாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் நிரஞ்சன் இப்படத்தின் எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார். ஏற்கனவே இப்படத்தை பற்றி வெளியான அனைத்து தகவல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

மேலும் இப்படம் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சத்யா படத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி இருப்பதாலும் இதன் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் ஆண்டவனுக்கே அண்ணன் டா எனவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த வசனமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Dha Dha 87
Dha Dha 87