Dha Dha 87 Poster

Dha Dha 87 Poster : சாருஹாசன் 87 வயதில் ஹீரோவாக நடித்துள்ள தாதா 87 படத்தின் புதிய போஸ்டர் அஜித் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ் என பலர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தாதா 87. மார்ச் 1 தேதி முதல் இப்படம் உலகம் முழுவதும் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் ரிலீசாக உள்ளது.

இந்த படத்தை கலை சினிமாஸ் கலைச் செல்வன் அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. லேண்டர் லீ மார்ட்டி இந்த படத்திற்கு இசையமைக்க, ராஜ பாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். நிரஞ்சன் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

கமல்ஹாசனின் சத்யா படத்தின் இரண்டாம் பாகமா தாதா 87?

தினம் ஒரு வித்தியாசமான போஸ்டர்களால் ரசிகர்களை கவரும் வகையில் படக்குழு இந்த படத்திற்கு ப்ரோமோஷன் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள போஸ்டர் அஜித் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. அதற்கு காரணம் இந்த புதிய போஸ்டரில் தரமான தூக்கு துரை என குறிப்பிட்டு இருப்பது தான்.

தல அஜித் விஸ்வாசம் படத்தில் தூக்கு துரை என்ற பெயரில் நடித்திருந்தார். இந்த போஸ்டரிலும் தூக்கு துரை என்ற பெயர் இடம் பெற்றிருப்பது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

Dha Dha 87

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.