Dha Dha 87 Upadte

Dha Dha 87 : விக், மேக்கப் என எதுவும் இல்லாமல் தாதா 87 ஹீரோவாக நடித்துள்ளார் சாருஹாசன். இது குறித்த போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ் என பலர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தாதா 87. மார்ச் 1 தேதி முதல் இப்படம் உலகம் முழுவதும் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் ரிலீசாக உள்ளது.

இந்த படத்தை கலை சினிமாஸ் கலைச் செல்வன் அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ளது.

லேண்டர் லீ மார்ட்டி இந்த படத்திற்கு இசையமைக்க ராஜ பாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். நிரஞ்சன் இப்படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

ஏற்கனவே இப்படத்தை பற்றி வெளியான அனைத்து செய்திகள், டீஸர், ட்ரைலர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

87 வயதில் ஹீரோவான ஒரே தமிழன் – ரசிகர்களின் எதிர்பார்ப்பில் தாதா 87!

மேலும் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சத்யா படத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி இருப்பதாலும் இதன் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.

இந்த எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரிக்கும் விதமாக புது போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் விக், மேக்கப் இல்லாத தரமான தமிழன் வரான் என்ற வசனம் இடம் பெற்றுள்ளது.

இதன் மூலம் 87 வயதிலும் விக், மேக்கப் என எதுவும் இல்லாமல் தன்னுடைய இயல்பான தோற்றத்தில் சாருஹாசன் நடித்துள்ளார் என்பது தெரிய வருகிறது.

DhaDha 87

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.