Dha-Dha-87

Dha Dha 87 : விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ் என பலர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தாதா 87. மார்ச் 1 தேதி முதல் இப்படம் உலகம் முழுவதும் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் ரிலீசாக உள்ளது.

இந்த படத்தை கலை சினிமாஸ் கலைச் செல்வன் அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. லேண்டர் லீ மார்ட்டி இந்த படத்திற்கு இசையமைக்க ராஜ பாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் நிரஞ்சன் இப்படத்தின் எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள், டீஸர், ட்ரைலர் ஆகியவை யூ ட்யூபில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருந்தது.

மேலும் இப்படம் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சத்யா படத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் 30 வருடத்திற்கு பிறகு சத்யா விடுதலை என்ற வசனம் இடம் பெற்றுள்ளது.

இதனை பார்த்த கமல் ரசிகர்கள் சத்யா கெத்தா மாஸா 30 வருடம் கழிச்சி வருகிறான் என கூறி வருகின்றனர். எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே வருகிறது.

Dha Dha 87

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.