Dha Dha 87 Review

Dha Dha 87 Review : விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் கலை சினிமாஸ் கலை செல்வன் தயாரிப்பில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தாதா 87.

இன்று திரைக்கு வந்துள்ள இந்த திரைப்படம் காதலையும் காதலின் மகத்துவத்தையும் பேசும் படமாக அமைந்துள்ளது.

படத்தின் கதைக்களம் :

வடசென்னை ஹௌசிங் போர்டு பகுதியில் ரோமியோவாக பெண்களின் பின்னாடி சுற்றி வருபவர் ஜொள்ளு பாண்டியாக நடித்துள்ள ஆனந்த் ரவி.

இதே பகுதியில் புதியதாக குடி வருகிறார் ஜெனி என்ற பெயரில் ஜனகராஜின் மகளாக நடித்துள்ள ஸ்ரீ பல்லவி. இவரை கண்டதும் ஜொள்ளு பாண்டி ஜெனி மீது காதல் கொள்கிறார்.

மேலும் இந்த பகுதியில் சட்ட விரோதமான செயல்களும் நடைபெறுகின்றன. இவர்களை அனைவரையும் நடுநடுங்க வைக்கும் டான் தான் தாதாவாக நடித்துள்ள சாருஹாசன்.

சாருஹாசனும் கீர்த்தி சுரேஷின் பாட்டியான சரோஜாவும் காதலிக்கின்றனர். கடைசியில் இவர்களுக்கு இடையேயான காதல் என்னாவது? ஜொள்ளு பாண்டி ஜெனியை கரம் பிடிப்பாரா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் மீதி கதை.

சாருஹாசன் :

இதுவரை திரையில் சாமியாராக, சாதுவான மனிதராக நடித்த சாருஹாசன் இந்த படத்தில் 87 வயதான தாதாவாக மிரட்டியுள்ளார்.

இந்த வயதிலும் இப்படியான கதாபாத்திரத்தில் துணிந்து நடித்துள்ள அவரை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

சரோஜா :

கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா சாருஹாசனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவருக்கும் சாருஹாசனுக்கும் இடையேயான காதல் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை ரசிக்க வைக்கின்றன.

ஜனகராஜ் :

ஜனகராஜ் வழக்கம் போல தன்னுடைய இயல்பான நடிப்பை பதிவு செய்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.

ஆனந்த் ரவி :

ஆனந்த் ரவி இந்த படத்தில் ரோடு சைட் ரோமியாவாக கலக்கு கலக்குவென கலக்கியுள்ளார். தன்னுடைய நடிப்பை பிரமாதமாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஸ்ரீ பல்லவி :

நாயகியாக அறிமுகமாகியுள்ள ஸ்ரீ பல்லவி நடிகைகள் பலரும் ஏற்று நடிக்க தயங்கும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் அனைவரும் பாராட்டும் வகையில் நடித்துள்ளார்.

தொழில் நுட்பம் :

இசை :

இந்த படத்திற்கு லேண்டர் லீ மார்டி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பின்னணி இசை, பாடல்கள் என அனைத்திலும் தன்னுடைய திறமையை முழுமையாக வெளிடுத்தியுள்ளார்.

ஒளிப்பதிவு :

ராஜ பாண்டி அவர்களின் ஒளிப்பதிவு படத்தில் இடம் பெரும் ஹௌசிங் போர்டு பகுதியை நம் கண் முன் கொண்டு வருகிறது. அந்த அளவிற்கு கச்சிதமாக சிறப்பாக தனது பணியை மேற்கொண்டுள்ளார்.

ஸ்ரீ வாட்சன் :

ஸ்ரீ வாட்சனின் எடிட்டிங்கும் பிரமாதம். முதல் பாதியில் ஒரு சில இடங்களில் மட்டும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம், மற்றபடி அவருடைய பணியும் சிறப்பு.

இயக்கம் :

விஜய் ஸ்ரீ இந்த படத்தை கமல்ஹாசனின் சத்யா படத்தை அடிப்படியாக கொண்டு வித்தியாசமான திரைக்கதையில் படத்தை விறுவிறுப்போடு கொண்டு சென்றுள்ளார். நாயகி பற்றிய ட்விஸ்ட் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

தம்ப்ஸ் அப் :

1. சாருஹாசன், சரோஜா உட்பட ஒட்டு மொத்த நடிகர் நடிகைகளின் நடிப்பு
2. சாருஹாசன், சரோஜா பாட்டிக்கும் இடையேயான காதல் காட்சிகள்
3. கிளைமாக்ஸ் ட்விஸ்ட்
4. இசை
5. ஒளிப்பதிவு

தம்ப்ஸ் டவுன் :

1. முதல் பாகத்தில் மட்டும் கொஞ்சம் வேகத்தை கூட்டியிருக்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.