Dha Dha 87 Movie

Dha Dha 87 First Night : தாதா 87 படத்தின் பர்ஸ்ட் நைட் ஸ்னீக் பீக் வீடியோ 1 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ் என பலர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தாதா 87. மார்ச் 1 தேதி முதல் இப்படம் உலகம் முழுவதும் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் ரிலீசாக உள்ளது.

கமல்ஹாசனின் சத்யா படத்தின் இரண்டாம் பாகமா தாதா 87?

இந்த படம் கலை சினிமாஸ் கலைச் செல்வன் அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ளது.

லேண்டர் லீ மார்ட்டி இந்த படத்திற்கு இசையமைக்க, ராஜ பாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். நிரஞ்சன் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இப்படத்தில் இருந்து பர்ஸ்ட் நைட் ஸ்னீக் பீக் வீடியோ நேற்று சமூக வளையதள பக்கமான யூ ட்யூபில் அதிகாரபூர்வமாக வெளியாகி இருந்தது.

பர்ஸ்ட் நைட் வீடியோ என்ற பெயரில் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் இந்த வீடியோவின் மீதான ஆர்வம் அதிகரித்தது.

இதனால் தற்போது வரை 1 லட்சம் பார்வையாளர்களை இந்த வீடியோவை பார்த்து பாராட்டியுள்ளனர். மேலும் பார்வையாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.