Dha Dha 87 and Thirumanam
Dha Dha 87 and Thirumanam

Dha Dha 87 and Thirumanam – தாதா 87 திரைப்படம் ரி – ரிலீஸ் ஆக இருப்பதை தொடர்ந்து சேரனின் திருமணம் திரைப்படமும் ரி – ரிலீஸாக உள்ளது.

தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனரான விஜய் ஸ்ரீ இயக்கத்தில் ஷாரூஹாசன், சரோஜா, ஜனாகராஜ் மற்றும் பலர் நடிப்பில் மார்ச் 1-ம் தேதி ரிலீஸானது.

சத்யா படத்தை அடிப்படையாக கொண்டு உருவானதால் ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் அதிக அளவில் தியேட்டர்கள் கிடைக்காததால் இப்படம் மீண்டும் கோடை விடுமுறையில் சில திருத்தங்களுடன் வெளியாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து இதே தினத்தில் சேரனின் இயக்கத்தில் உமாபதி, காவ்யா, தம்பி ராமையா சுகன்யா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் திருமணம்.

ஒரு நடுத்தர குடும்பத்தில் நடக்கும் திருமணம் குறித்தும் திருமணத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டியது எது என்பதையெல்லாம் இப்படம் அலசி ஆராய்ந்தது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தும் இந்த படத்திற்கும் போதுமான அளவில் தியேட்டர்கள் கிடைக்கவில்லை.

இதனால் இந்த படத்தையும் கோடை விடுமுறை கொண்டாட்டமாக ஏப்ரல் 12-ம் தேதி ரி-ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.