அ.தி.மு.கவிற்கு தான் எங்கள் ஓட்டு - தேவேந்திரகுல வேளாளர் ஜான் பாண்டியன் பேட்டி

Watch Full VIdeo : – அ.தி.மு.கவிற்கு தான் எங்கள் ஓட்டு – தேவேந்திரகுல வேளாளர் ஜான் பாண்டியன் பேட்டி

தேவேந்திர குல வேளார்கள் என்ற பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட உறுதுணையாக இருந்த அ.தி.மு.கவிற்கு நன்றி விசுவாசமாக இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ஜான் பாண்டியன், நாடாளுமன்றத்தில் தேவேந்திர குல வேளாளர்கள் என்று பெயர் மாற்றம் செய்யும் சட்ட மசோதா தாக்கல் செய்தபோது தி.மு.க வெளிநடப்பு செய்து புறக்கணித்ததாக குற்றம் சாட்டினார்.

தேவேந்திர குல வேளாளர்கள் என 40 வருடங்களுக்கு பிறகு பெயர் மாற்றம் செய்ய உதவி செய்த அ.தி.மு.கவிற்கு நன்றி விசுவாசமாக தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் ஜான் பாண்டியன் தெரிவித்தார்.

குறிப்பிட்ட சில சமூகத்தினர் தங்களை தேவேந்திர குல வேளாளர் என அளிவிக்குமாறு நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்த நிலையில் அதனை அதிமுக அரசு நிறைவேற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.