Devaraattam Review

Devarattam Review : ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் கெளதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், சூரி, போஸ் வெங்கட் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தேவராட்டம்.

படத்தின் கதைக்களம் :

மதுரையை சேர்ந்த தம்பதிக்கு 6 பெண் குழந்தைகள் இருப்பினும் ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக 7-வது குழந்தை பெற்று கொள்கின்றனர். கூடவே அந்த தம்பியின் முதல் மகளுக்கும் பிரசவம். தாய் ஒரு புறம் பெண் ஒரு புறம் என ஒரே மருத்துவமனையில் குழந்தை பெற்று கொள்கின்றனர்.

அப்படி 7-வதாக பிறந்த குழந்தை தான் கெளதம் கார்த்திக். அவரது மூத்த அக்கா தான் அனைத்து குழந்தைகளை தன் குழந்தைகள் போல வளர்க்கிறார். கெளதம் கார்த்திக்கு ஒரு அக்காவாக மட்டுமில்லாமல் அம்மாவாவும் இருக்கிறார்.

6 அக்காக்களும் மாமாக்களும் சேர்ந்து கெளதம் கார்த்திக்கை வக்கீலுக்கு படிக்க வைக்கின்றனர். வக்கீலுக்கு படித்திருந்தாலும் கெளதம் கார்த்திக் மதுரையை தவறு செய்பவர்களை தட்டி கேட்கும் வீரனாகவே இருந்து வருகிறார்.

இதே மதுரையில் பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்த இளைஞரை ஒரு பெண் செருப்பால் அடிக்கிறார். இதனால் அந்த பெண்ணை மதுரையை அடக்கி ஆண்டு வரும் கும்பல் அந்த பெண்ணை கடத்தி கற்பழித்து நாசம் செய்து விடுகின்றனர்.

இது கெளதம் கார்த்திக்கு தெரிய வர இந்த கும்பலை எப்படி வேரறுகிறார்? இவர்களை எதிர்ப்பதால் அவரும் அவருடைய குடும்பமும் சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன என்பது தான் இப்படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல் :

நடிகர், நடிகைகளின் நடிப்பு :

இதுவரை காதல் நாயகனாகவே பார்த்து பழகிய கெளதம் கார்த்திக் இந்த படத்தில் ஆக்ஷனிலும் படு மாஸாக பட்டய கிளப்பியுள்ளார்.

மஞ்சிமா மோகன் கியூட்டான பெண்ணாக கிராமத்து பெண் வேடத்தில் கச்சிதமாக நடித்துள்ளார்.

மேலும் சூரி, போஸ் வெங்கட், கெளதம் கார்த்திக்கின் மூத்த அக்காவாக நடித்திருப்பவரின் நடிப்பு ஆகியவை பிரமாதமாக அமைந்துள்ளது.

தொழிநுட்பம் :

இசை :

நிவாஸ் கே பிரசன்னா மதுரை மண்ணின் மகத்துவம் அறிந்து படத்திற்கு இசையமைத்துள்ளார். பின்னணி இசையால் இந்த படத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். பாடல்களும் கிராமத்து வாசனையுடன் ரசிக்கும் படியாக அமைந்துள்ளன.

ஒளிப்பதிவு, எடிட்டிங் :

சக்தி சரவணன் ஒளிப்பதிவு பிரமாதம், பிரவீன் கே.எல் எடிட்டிங் பற்றி சொல்லவே தேவையில்லை. படு கச்சிதமாக அமைந்துள்ளது.

ஸ்டண்ட் :

திலீப் சுப்புராயனின் ஸ்டண்ட் பற்றி நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். படம் முழுவதும் அவருக்கு மிக பெரிய பங்கு உள்ளது. அதனை மிக அற்புதமாக செய்துள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. கெளதம் கார்த்திக் நடிப்பு
2. ஆக்ஷன் காட்சிகள்
3. பாடல்கள்

தம்ப்ஸ் டவுன் :

1. படம் முழுவதையும் ஒரே அடிதடியாக கொண்டு சென்றுள்ளனர். அதை கொஞ்சம் குறைத்து குடும்ப பாசத்தை இன்னும் கொஞ்சம் பேசி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

REVIEW OVERVIEW
தேவராட்டம் விமர்சனம்.!
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
devarattam-reviewமொத்தத்தில் தேவராட்டம் ஜாதி படமல்ல.. பெண்ணின் பெருமையை பேசும் படம்.