Bigil Movie Updates
பிகில் படத்தில் தன்னுடைய மகளுக்கு வாய்ப்பு கிடைத்தும் வேண்டாம் என மறுத்துள்ளார் பிரபல நடிகையான தேவதர்ஷினி.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி இருந்த திரைப்படம் பிகில். அட்லீ இயக்கி இருந்த இந்த படத்தில் தேவதர்ஷினி விஜயின் அக்காவாக நடித்துள்ளார்.

இவருடைய மகள் நியதிக்கும் பிகில் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது, ஆனால் அவருக்கு 10-ம் வகுப்பு பொது தேர்வு என்பதால் பிகில் வாய்ப்பை வேண்டாம் என மறுத்துள்ளார் தேவதர்ஷினி.

இது குறித்து அவரே பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். மேலும் நியதி விஜயின் தீவிர ரசிகை என்பதால் அவருடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றுள்ளார்.

விஜய் நியதியுடன் புகைப்படம் எடுத்து கொண்டது மட்டுமில்லாமல் 10 நிமிடம் பேசியதாகவும் தேவதர்ஷினி கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.