Dev Movie Review

Dev Movie Review : பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங்க், பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே விக்னேஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தேவ். இந்த படத்தை அறிமுக இயக்குனரான ரஜத் ரவிசங்கர் இயக்கியுள்ளார்.

கதைக்களம் :

எப்போதும் துறுதுறுவென வாழ்க்கையை பற்றி எந்தவித கவலையும் இல்லாமல் நண்பர்களுடன் ஜாலியாக வாழ்ந்து வருபவர் நடிகர் கார்த்தி.

இவரை எப்படியாவது காதலிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பேஸ்புக்கில் கார்த்தியின் கணக்கில் இருந்து ரகுல் ப்ரீத் சிங்கிற்கு ரெக்வஸ்ட் கொடுக்க வைக்கிறார். கார்த்திக்கும் முதல் முறையாக ரகுல் ப்ரீத் சிங் புகைப்படத்தை பார்த்ததுமே பிடித்து விடுகிறது.

ஒரு நாள் ரகுல் ப்ரீத் சிங்கை சென்னையில் சந்திக்கிறார் தனது காதலையும் வெளிப்படுத்துகிறார். ஆனால் ரகுல் அதனை ஏற்க மறுக்கிறார்.

அதன் பின்னர் ஒருவழியாக ரகுலின் மனதை கவர்ந்து காதல் வலையில் விழ வைத்து விடுகிறார். ஆனால் திடீரென இவர்கள் இருவருக்குள்ளும் பிரிவு ஏற்படுகிறது .

அதன் பின்னர் கார்த்தி என்னவாகிறார்? மீண்டும் தன் காதலியுடன் சேர்கிறாரா? இல்லையா? என்பதை அட்வென்சருடன் கூறுவது தான் இப்படத்தின் கதையும் களமும்.

கார்த்தி :

கார்த்தி வழக்கம் போல் இப்படத்திலும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காதல், ரொமான்ஸ், ஆக்ஷன் என அனைத்திலும் ரசிக்க வைத்துள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங் :

தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங். அந்த படத்தை போலவே இப்படத்திலும் தன்னுடைய அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரகாஷ் ராஜ் :

சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படத்தில் தன் மகனை தன் கைக்குள்ளாகவே வைத்திருக்கும் பிரகாஷ் ராஜ் இந்த படத்தில் தன்னுடைய மகனான கார்த்தியை சுதந்திர பறவையாக அவரது விருப்பத்திற்கு வாழ விட்டுள்ளார்.

ரம்யா கிருஷ்ணன் :

ரகுல் ப்ரீத்தி சிங்கின் அம்மாவாக தன்னுடைய நடிப்பை மிகவும் எதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளார் ரம்யா கிருஷ்ணன்.

ஆர்.ஜே விக்னேஷ் :

படம் முழுவதும் கார்த்தியுடன் இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆர்.ஜே. விக்னேஷ். அவரும் தன்னுடைய கதாபாத்திரத்தை முழுமையாக நடித்து கொடுத்துள்ளார்.

தொழில் நுட்பம் :

இசை :

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹரிஷ் ஜெயராஜ் தேவ் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தை தாங்கி பிடித்திருப்பதே இசை தான். ஆனாலும் சில இடங்களில் இப்படத்தின் இசையும் இதை எங்கயோ கேட்ட மாதிரியே இருக்கே எனவும் யோசிக்க வைக்கிறது.

ஒளிப்பதிவு :

பொல்லாதவன், ஆடுகளம், எங்கேயும் எப்போதும் ஆகிய படங்களுக்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருது பெற்ற ஆர். வேல் ராஜ் தான் இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். அதையும் சிறப்பாகவே செய்துள்ளார்.

எடிட்டிங் :

ஏ.எல் ரூபன் இப்படத்திற்கான எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். வழக்கம் போல் இப்படத்திற்கும் எது தேவையோ அதனை அழகாகவே கொடுத்துள்ளார்.

இயக்கம் :

ரஜத் ரவிசங்கர் இப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். முதல் பாதியில் ஆக்ஷன், ரொமான்ஸ் என கொடுத்து விட்டு இரண்டாம் பாதியில் கொஞ்சம் ட்ராக்கை மாற்றியுள்ளார். ஆனால் படத்தின் வேகத்தை இன்னும் கொஞ்சம் கூட்டிருந்தால் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.

தம்ப்ஸ் அப் :

1. கார்த்தி, ரகுல் ப்ரீத் நடிப்பு
2. இரண்டாம் பாதியில் கார்த்தி எடுக்கும் ரிஸ்குகள்
3. படத்தின் கிளைமேக்ஸ்
4. ஒளிபதிவு

தம்ப்ஸ் டவுன் :

1. படத்தின் வேகத்தை கூட்டி இருக்கலாம்
2. A கிளாஸ் ரசிகர்களுக்கு மட்டுமே ஏற்ற கதை
3. காமெடிகளுக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.

YouTube video

REVIEW OVERVIEW
தேவ் விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
dev-movie-reviewமொத்தத்தில் தேவ் A கிளாஸ் ஆடியன்ஸ்களுக்கும் காதலர்களுக்கும் ஏற்ற படமாக இருக்கும். ஆனால் மற்றவர்களுக்கு முழு திருப்தியை கொடுக்குமா என்றால் அது கேள்வி குறி தான்.