Dev Collection : நேற்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படமான கார்த்தியின் தேவ் சென்னையில் முதல் நாள் வசூல் எவ்வளவு என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் உள்ள பிரபல நடிகர்களில் ஒருவரான கார்த்தி நடிப்பில் ரஜத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தேவ்.
இந்தியன் 2 படத்தில் இணைந்த ஆர்.ஜே பாலாஜி – அதுவும் இப்படியொரு கேரக்டர்ல.!
காதல் மற்றும் அட்வென்சர் கலந்த திரைப்படமாக உருவாகி இருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து தற்போது இப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது. சென்னையில் மட்டுமே இப்படம் ஒரே நாளில் ரூ 51 லட்சம் வசூல் செய்துள்ளது.
மேலும் அடுத்தடுத்த நாட்களிலும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல பாலிவுட்டில் ரன்வீர் சிங்-ஆலியா பட் நடித்த Gully Boy படம் வெளியாகி இருந்தது. இந்த படம் சென்னையில் ரூ 13 லட்சம் வரை வசூல் செய்துள்ளது.