Details of Thala 61 Director
Details of Thala 61 Director

தல 61 படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Details of Thala 61 Director : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது மத்திய அரசு படப்பிடிப்புகளை நடத்த அனுமதி அளித்துள்ளது.

இதனால் வெகு விரைவில் வலிமை படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் தல அஜித் தமிழே அடுத்த படமான தல 61 படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் இவர் அடுத்ததாக துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற வெற்றி படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தளபதி 65 தொடங்குவது எப்போது? தளபதி 66 இயக்குனர் யார்? – ஒரே நேரத்தில் வெளியான இரண்டு அப்டேட்.!!

ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை பாராட்டி இருந்தார். மேலும் தனக்கு ஒரு கதை தயார் செய்யுமாறு கூறியிருந்தார்.

இதனால் தல அஜித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு போன் செய்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க முடிவு செய்து இருப்பதாகவும் அது குறித்து ரஜினியிடம் கலந்துரையாடியதாக யாரோ ஒருவர் கிளப்பி விட சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியுள்ளன.

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தல அஜித் நடித்தால் படம் நிச்சயம் நன்றாக இருக்கும் என அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் எதுவும் உறுதியாகும். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருப்போம்.

உண்மையில் அஜித் தேசிங்கு பெரியசாமி கூட்டணி அமைந்தால் எப்படி இருக்கும் என உங்களது கருத்துகளை எங்களோடு கமெண்ட் பாக்ஸ்-ல் பகிர்ந்து கொள்ளுங்கள்.