Details of Plasma Therapy Treatment
Details of Plasma Therapy Treatment

சக உயிர்களைக் காக்க பிளாஸ்மா தானம் செய்வோம் என முதல்வர் பழனிசாமி வீடியோ வெளியிட்டுள்ளார்.

Details of Plasma Therapy Treatment : தமிழகத்தில் கொரானா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதேசமயம் மருத்துவர்களின் அயராத உழைப்பால் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர்கிறது. இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

மேலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவரை அதி விரைவாக குணப்படுத்த உதவும் சிகிச்சை தான் பிளாஸ்மா தெரபி. ஆனால் தமிழகத்தில் பிளாஸ்மா தானம் செய்ய பலர் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக தமிழக முதல்வர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது குரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்வதன் மூலமாக ஒருவர் இரு உயிரை காப்பாற்றலாம்.

தமிழக அரசு பிளாஸ்மா சிகிச்சைக்காக ICMR, CDSCO போன்றவைகளிடமிருந்து அனுமதி பெற்றுள்ளது.

பிளாஸ்மா தானம் செய்வதால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் 14 நாட்கள் கழித்து பிளாஸ்மா தானம் அளிக்கலாம்.

அதற்கு அவர்கள் 18 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். ஒருமுறை பிளாஸ்மா தானம் அளித்த பின்பு மீண்டும் 28 நாட்கள் கழித்து இன்னொரு முறை பிளாஸ்மா தானம் அளிக்கலாம். ஒருவர் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே தானம் செய்ய முடியும்.

கொரோனா ஒழிப்பில் பக்காவா ஒர்க் அவுட் ஆன அஜித்தின் ஐடியா.. நன்றி தெரிவித்த கர்நாடக துணை முதல்வர்!

இதய நோய், ஆஸ்துமா, புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பிளாஸ்மா தானம் கொடுக்க இயலாது.

பிளாஸ்மா தானம் செய்வோம், சக உயிர்களை காப்போம் என முதல்வர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை மூலம் 26 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில் 24 பேர் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். மதுரையில் ஒருவர் குணம் அடைந்துள்ளார்.

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி அமைப்பதற்காக ரூபாய் 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு முதல்வர் வெளியிட்ட வீடியோ இதோ