Details of CWC Ashwin in First Movie

குக் வித்து கோமாளி அஸ்வின் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Details of CWC Ashwin in First Movie : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி இரண்டாவது சீசன் நேற்றோடு முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த அஸ்வினுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது. இவர் நிச்சயம் வெள்ளித்திரையில் ஹீரோவாக நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிக அளவில் இருந்து வந்தது. தற்போது அது நிறைவேறியுள்ளது.

டிரைடன் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள படத்தில் அஸ்வின் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கூடுதல் சிறப்பு என்னவென்றால் இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் தான் காமெடியனாக நடிக்கிறார். படத்தினை அறிமுக இயக்குனர் ஹரிஹரன் என்பவர் இயக்க உள்ளார்.

படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அஸ்வின் மற்றும் புகழ் ஆகியோர் வீடியோ ஒன்றின் மூலமாக அறிவித்துள்ளனர். இதனால் அஸ்வின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.