Details of Ajith and Sudha Kongara Movie

சுதா கொங்கரா தல அஜித்தை இயக்குவது உறுதி எனவும் ஆனால் இந்த கூட்டணி எப்போது என்பதுதான் சந்தேகம் என கூறப்படுகிறது.

Details of Ajith and Sudha Kongara Movie : தமிழ் சினிமாவில் இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. முதல் படத்திலேயே சிறந்த இயக்குனராக தடம்பதித்த சுதா கொங்கரா அடுத்து சூர்யாவை வைத்து சூரரைப்போற்று என்ற படத்தை இயக்கினார்.

அஜித்தை இயக்குவது உறுதி.. ஆனால் இது தான் தெரியல - சுதா கொங்கரா படம் பற்றி வெளியான தகவல்.!!

இதனையடுத்து தங்கம் என்ற வெப்சீரிஸ் தொடரை இயக்கி இருந்தார். மேலும் இவர் தல அஜித்தை இயக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. அடிக்கடி இவர்களது சந்திப்பு நடந்து வருகிறதாம்.

தல அஜித் அடுத்ததாக மீண்டும் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு பிறகு அஜித் சுதா கொங்கரா கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சுதா கொங்கரா தரப்பின் அஜித்தை இயக்குவது உறுதி ஆனால் அது எப்போது என்பதுதான் தெரியவில்லை என கூறப்படுவதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.