நெருங்கிய தோழியின் கணவருக்கு இரண்டாவது மனைவியாக உள்ளாராம் ஹன்சிகா.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் ஹன்சிகா விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார். சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

அந்த புகைப்படங்களை ஹன்சிகா சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார். இப்படியான நிலையில் தற்போது ஹன்சிகாவின் வருங்கால கணவர் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது ஹன்சிகாவின் கணவன் ஹோசைல் கதுரியா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என தெரிய வந்துள்ளது. அதாவது ஹன்சிகாவின் தோழி ரிக்கியின் முன்னாள் கணவர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தகவல் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.