dengue
தமிழகத்தில் தற்போது டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக செய்தி கசிந்துள்ளது.

Dengue fever spread in tamilnadu people shock – தமிழகத்தில் தற்போது டெங்கு நோய் பாதிப்பு பற்றிய தகவல்கள் பரவி வருகின்றன. தமிழக அரசின் சுகாதாரத்துறையும், உள்ளாட்சித்துறையும் போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறி வருகிறது. ஆனால், அரசின் புள்ளி விபரங்கள் நம்பும் படி இல்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. அரசின் அலட்சியத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள போதும் தமிழகமெங்கும் டெங்குவால் பல குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையிலும், டெங்கு காய்ச்சலை “மர்மக் காய்ச்சல்” என்று கணக்குக் காட்டுவதில் அ.தி.மு.க. அரசு தீவிரம் காட்டுகிறது என அவர் கூறியுள்ளார்.

stalin

அதாவது, டெங்கு பாதிப்பால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்படும் போது ‘மர்ம காய்ச்சல்’ என்றே குறிப்பில் எழுதப்படுகிறது. ஒன்று இரண்டு நோயாளிகளை மட்டுமே ‘டெங்கு காய்ச்சல்’ என பதிவிட்டு தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அவ்வளவாக இல்லை என்கிற தோற்றத்தை தமிழக அரசு உருவாக்க பார்க்கிறது என சமூக ஆர்வலர்கள் பலரும் புகார் கூறி வருகின்றனர்.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை என பல அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு பாதிப்படைந்த பலருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் மே மாதம் வரை 900க்கும் மேற்பட்டோர் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனர்.

பிகில் படம் பார்த்துட்டேன்.. எப்படி இருக்கு தெரியுமா? – தயாரிப்பாளர் போட்ட டிவிட்

தற்போது அது அதிகரித்து 2500 பேர் வரை பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், இதுவரை 4 குழந்தைகள் டெங்கு பாதிப்பில் உயிரிழந்துவிட்டதாகவும், அரசு தரப்பில் இந்த செய்திகளை உறுதிப்படுத்தமாலேயே இருப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வருகின்றனர்.

டெங்கு பாதிப்பை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. எனவே, தமிழக அரசு தாக்கல் செய்யும் பதிலில் உண்மை நிலவரம் வெளிவருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டெங்கு நோய் பரவு நிலையிலேயே அதை கட்டுப்படுத்தி, மக்களை உயிரிழப்புகளிலிருந்து பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.