Delhi Ganesh

Delhi Ganesh : இதுவரை என்கிட்டே யாருமே சொல்லாத வார்த்தையை தல அஜித் சொன்னார் என டெல்லி கணேஷ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் வித்யா பாலன், ஷ்ரதா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

தற்போது டெல்லி கணேஷ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜித்தை பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டு உள்ளார்.

செட்டில் இடைவெளி கிடைக்கும் போதெல்லாம் நானும் அஜித்தும் பேசி கொள்வோம். அப்போது என்னுடைய மகனை ஹீரோவாக வைத்து படமெடுத்த நஷ்டமடைந்து விட்டேன் என கூறினேன்.

அப்போது அஜித் உங்க பையன் நடிக்கிறாரா? என கேட்டார். மேலும் என் மகனுடைய படத்தின் டீசரை பார்த்து விட்டு அவரை நான் நேரில் பார்க்கலாமா? என கேட்டார்.

என் மகனுக்கு போன் செய்து செட்டிற்கு வர சொன்னேன். அப்போது அஜித் அவனுக்கு ஊக்கம் அளித்து நல்லா நடிக்கறீங்க நல்ல எதிர்காலம் இருக்கு என வாழ்த்தினார். மேலும் உங்க மகனுக்காக நாம ஏதாவது செய்யலாம் எனவும் கூறினார்.

இதுவரை இப்படியான வார்த்தையை எந்த நடிகரும் என்னிடம் கூறியது இல்லை. மேலும் என்னுடைய ட்ரைவர் உங்களுடைய ரசிகர் என கூறியதும் அவரை அழைத்து போட்டோ எடுத்து கொண்டார் என கூறியுள்ளார்.

இதனால் என் ட்ரைவர் எனக்கு இந்த மாதம் சம்பளமே வேண்டாம் இந்த போட்டோவே போதும் என கூறியதாகவும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.