Delhi Capitals Won The Match | Festival has reached the final stage | Delhi Capitals | SunRisers Hyderabad | DC vs SRH | IPL Match

Delhi Capitals Won The Match :

Delhi Capitals Won The Match : 12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது.

இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் நேற்று இரவு நடந்த வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 4-வது இடம் பெற்ற ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை சந்தித்தது.

இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டது. டெல்லி அணியில் காலின் இங்ராம் நீக்கப்பட்டு காலின் முன்ரோ சேர்க்கப்பட்டார். ஐதராபாத் அணியில் யூசுப் பதானுக்கு பதிலாக தீபக் ஹூடா இடம் பிடித்தார்.

‘டாஸ்’ ஜெயித்த டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சஹா, மார்ட்டின் கப்தில் ஆகியோர் களம் இறங்கினார்கள்.

முதல் ஓவரில் டிரென்ட் பவுல்ட் வீசிய முதல் பந்திலேயே விருத்திமான் சஹாவுக்கு நடுவர் ‘அவுட்’ வழங்கினார். ஆனால் நடுவரின் முடிவை எதிர்த்து விருத்திமான் சஹா அப்பீல் செய்து எல்.பி.டபிள்யூ. கண்டத்தில் இருந்து தப்பினார்.

மறுமுனையில் மார்ட்டின் கப்தில் அதிரடியாக ஆடினார். அவர் இஷாந்த் ஷர்மா பந்து வீச்சில் ஒரு சிக்சரும், டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் தொடர்ந்து 2 சிக்சரும் அடித்து கலக்கினார்.

3.1 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 31 ரன்னாக இருந்த போது விருத்திமான் சஹா (8 ரன்) இஷாந்த் ஷர்மா பந்து வீச்சில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து மனிஷ் பாண்டே களம் இறங்கினார். பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) ஐதராபாத் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்தது.

அணியின் ஸ்கோர் 6.3 ஓவர்களில் 56 ரன்னாக உயர்ந்த போது அடித்து ஆடிய மார்ட்டின் கப்தில் (36 ரன்கள், 19 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்) அமித் மிஸ்ரா பந்து வீச்சில் கீமோ பாலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அதன் பிறகு அணியின் ரன் வேகம் குறைந்தது. அடுத்து நிதானமாக ஆடிய மனிஷ் பாண்டே (30 ரன்கள், 36 பந்து, 3 பவுண்டரி) கீமோ பால் பந்து வீச்சில் ரூதர்போர்டிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.

இதனை அடுத்து விஜய் சங்கர், கேப்டன் கேன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அடித்து ஆடினார்கள். விஜய் சங்கர் ஆட்டத்தில் அதிரடி தென்பட்டது.

14.3 ஓவர்களில் ஐதராபாத் அணி 100 ரன்னை கடந்தது. நிலைத்து நின்று ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேன் வில்லியம்சன் (28 ரன்கள், 27 பந்து, 2 பவுண்டரி) இஷாந்த் ஷர்மா பந்து வீச்சில் போல்டு ஆனார்.

சற்று நேரத்தில் விஜய் சங்கரும் (25 ரன்கள், 11 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் அக்‌ஷர் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

கடைசி ஓவரில் முகமது நபி (20 ரன்), தீபக் ஹூடா (4 ரன்), ரஷித் கான் (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. புவனேஷ்வர்குமார் ரன் எதுவும் எடுக்காமலும், பாசில் தம்பி 1 ரன்னுடனும் களத்தில் நின்றனர்.

பொன்னியின் செல்வன் படத்துக்காக இப்படியெல்லாம் செய்கிறாரா விக்ரம் – அசத்தல் தகவல்!

டெல்லி அணி தரப்பில் கீமோ பால் 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டும், டிரென்ட் பவுல்ட், அமித் மிஸ்ரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

ரிஷாப் பான்ட், பிரித்வி ஷாவுடன் ஜோடி சேர்ந்தார். அடித்து ஆடிய பிரித்வி ஷா 38 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்த நிலையில் கலீல் அகமது பந்து வீச்சில் விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த காலின் முன்ரோ (14 ரன்), அக்‌ஷர் பட்டேல் (0), ரூதர்போர்டு (9 ரன்) ஆகியோர் வந்த வேகத்திலேயே ஆட்டம் இழந்து நடையை கட்டினார்கள்.

ஆனால் மறுமுனையில் ரிஷாப் பான்ட் அதிரடியாக ஆடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார்.

அணியின் ஸ்கோர் 18.5 ஓவர்களில் 158 ரன்னாக இருந்த போது ரிஷாப் பான்ட் (49 ரன்கள், 21 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) புவனேஷ்வர்குமார் பந்து வீச்சில் முகமது நபியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

கடைசி ஓவரில் டெல்லி அணி வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் 4-வது பந்தில் அமித் மிஸ்ரா(1 ரன்) சர்ச்சைக்குரிய முறையில் ரன்-அவுட் ஆனதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த பந்தை கீமோ பால் பவுண்டரிக்கு விரட்டி அணியை வெற்றி பெற வைத்தார்.

19.5 ஓவரில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்கிறது. தோல்வி கண்ட ஐதராபாத் அணி வெளியேறியது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.