நடிகர் விஜயின் மெர்சல் படத்தில் இடம் பெற்றிருக்கும் நீதானே நீதானே என்ற பாடலின் நீக்கப்பட்ட காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

இயக்குனர் அட்லி இயக்கத்தில் 2017இல் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் தான் ‘மெர்சல்’. இப்படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.

மெர்சல் படத்தின் பாடலின் நீக்கப்பட்ட காட்சி வைரலாகி வருகிறது.!

மேலும் இதில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடிகரும் இயக்குனருமான எஸ் ஜே.சூர்யா அசத்தியிருந்தார். பாக்ஸ் ஆபிஸில் 200 கோடியை வசூல் செய்த இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சூப்பரான பாடல்களை இசை அமைத்துக் கொடுத்திருந்தார்.

மெர்சல் படத்தின் பாடலின் நீக்கப்பட்ட காட்சி வைரலாகி வருகிறது.!

அதிலும் இப்படத்தில் விஜய் மற்றும் சமந்தா காம்போவில் இடம்பெற்று இருக்கும் “நீதானே நீதானே” என்ற பாடல் தற்போது வரை பலரது ஃபேவரிட் லிஸ்டில் இருக்கின்றது. இந்நிலையில் இப்பாடலில் இருந்து நீக்கப்பட்ட ஒரு சிறிய காட்சி தற்போது ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

https://twitter.com/ChandruJcs23/status/1557920711720968193?t=ceNOFI6Dx9Odvh1aSZGBkA&s=19