Deepika Padukone Pair With Rajinikanth

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்பது பற்றி தெரிய வந்துள்ளது.

Deepika Padukone Pair With Rajinikanth : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட நிறைவை நெருங்கிவிட்டன. தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படம் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான 21 இடங்களில் ரெய்டு..

இதை படத்தினைத் தொடர்ந்து அடுத்ததாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் அல்லது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கலாம் என கூறப்படுகிறது.

நாங்க மூணு பேரும் ஒரே பொண்ணை தான் LOVE பண்ணுவோம் – Fun Chat With Weekend Album Team | V2 Vicky Vijay

இந்நிலையில் தற்போது இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் சினிமாவை சேர்ந்த தீபிகா படுகோனே நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே ரஜினியுடன் இணைந்து கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.