Deepika Kumari won the gold medal
Deepika Kumari won the gold medal

21-வது ஆசிய வில்வித்தை சாம்பியன்‌ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்தது. இதன் ஒரு பகுதியாக ஆசிய மண்டலத்துக்கான ஒலிம்பிக் தகுதி சுற்று பந்தயமும் அங்கு நடைபெற்றது.

பெண்களுக்கான ரிகர்வ் தனிநபர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் தீபிகா குமாரி, அங்கிதா பகத் ஆகியோர் மோதினார்கள்.

இதில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய தீபிகா குமாரி 6-0 என்ற கணக்கில் சக வீராங்கனை அங்கிதா பகத்தை எளிதில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். அங்கிதா பகத் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.