Deepam Benefits ; Spirituality, Aanmeegam news, Spiritual Guidance, spiritual News, ஆன்மிகம், அபூர்வ தகவல்கள், ஆன்மிகம், Deepam

Deepam Benefits :

▪ நம்முடைய இல்லம் மங்களமாக இருக்க தினந்தோறும் விளக்கினை ஏற்றி வழிபடுகிறோம்.

வீட்டில் உள்ள விளக்கை செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் துளக்கக்கூடாது என்று அனைவருக்கும் தெரிந்தது. எந்த நாட்களில் விளக்கை துலக்கினால் நன்மை பயக்கும் என்பதை பார்ப்போம்.

தர்ப்பணம் வேறு, சிரார்த்தம் வேறு இரண்டிற்கும் உள்ள வித்தியாசம், தெரிந்து கொள்ளலாமா?

▪ ஞாயிற்று கிழமை அசைவ உணவை சமைக்காத வீடுகளில் விளக்கை துலக்குவதால் கண் சம்பந்தமான நோய்கள் தீரும். அசைவம் செய்தால் அன்று விளக்கினை துலக்குதல் கூடாது.

▪ திங்கட் கிழமைகளில் விளக்கை துலக்குவதால் நம்முடைய மனமானது எங்கும் அலையாமல் அமைதியாக இருக்கும்.

▪ திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி குடியிருக்கிறாள். ஆகையால் புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் தனயட்சணி வெளியேறிவிடுவாள். ஆகவே விளக்கு துலக்க புதன்கிழமை சிறந்தது அல்ல.

▪ வியாழக்கிழமைகளில் விளக்கை துலக்குவதால் குருபகவானின் அருட்கடாக்ஷம் கிடைத்து மனக் கவலைகள் அனைத்தும் பறந்து போகும்.

▪ சனிக்கிழமைகளில் விளக்கை துலக்கினால் வாகன விபத்துகள் ஏற்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here