Hero Thambi Psycho
டிசம்பர் மாதத்தில் வெளியாக உள்ள ஹீரோ, சைக்கோ, தம்பி ஆகிய படங்களில் மக்கள் அதிகம் எதிர்பார்க்கப்பது எது என்று நடத்தபட்ட கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு மாதமும் பல படங்கள் ரிலீசாகின்றன, ஆனால் ஒரு சில படங்கள் மட்டுமே மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கூட்டும் வரவேற்பையும் பெறும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

அப்படி தான் டிசம்பர் மாத ரிலீஸில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்கள் லிஸ்டில் மிஷ்கினின் சைக்கோ, மித்ரனின் ஹீரோ மற்றும் கார்த்தியின் தம்பி ஆகிய படங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த மூன்று படங்களில் இன்னும் அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் எது என கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது.

இதில் ட்விட்டர் வோட்டிங் முடிவில் ஹீரோவும் சைக்கோவும் கிட்டத்தட்ட ஒரே அளவில் வரவேற்பை பெற்றுள்ளன.

சைக்கோ படத்தை மிஸ்கின் இயக்க உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். மித்ரன் இயக்கியுள்ள ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி, அர்ஜுன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அதே போல் தம்பி படத்தை ஜீத்து ஜோசப் இயக்க கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.