Dear Comrade Review : Bharat Kamma, Vijay Deverakonda, Rashmika Mandanna, Cinema Review, Kollywood , Tamil Cinema, Latest Cinema Review, Tamil Cinema Review
பரத் கம்மா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் டியர் காம்ரேட். இந்த படத்தின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம் வாங்க.

Dear Comrade Review :

படத்தின் கதைக்களம் :

விஜய் தேவரகொண்டா காக்கிநாடா பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வருகிறார். இவருடைய கோபத்தால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி கொள்கிறார். இவருடைய கோபம் எப்போதும் பிரச்னையை ஏற்படுத்தி விடுகிறது.

இவரின் உறவு முறை பெண்ணான ராஷ்மிகா மந்தனா ஒரு கிரிக்கெட் வீரர். இவர் ஊருக்கு வரும் போது இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. ஆனால் விஜய் தேவர்கொண்டாவின் கோபம் காதலை பிரித்து விடுகிறது.

அதன் பின்னர் ஒரு திருப்புமுனை ஏற்படுகிறது. அந்த திருப்புமுனை என்ன? அதன் பிறகு இவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது தான் இப்படத்தின் மீதி கதையும் களமும்.

படத்தை பற்றிய அலசல் :

விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு வழக்கம் போல பிரமாதம். படத்தை ஒரு புறம் இவர் தூக்கி செல்கிறார். இவருக்கு இணையாக சிறப்பான நடிப்பால் படத்தில் மேலும் பலம் சேர்த்துள்ளார் ரஷ்மிக்கா மந்தனா.

தொழில் நுட்பம் :

இசை :

ஜஸ்டின் பிரபாகரனின் இசை படத்திற்கு கூடுதல் பலம், பின்னணி இசையில் பின்னி பெடலெடுத்துள்ளார். பாடல்களும் ரசிக்கும் படியாக அமைந்துள்ளது.

ஒளிப்பதிவு & எடிட்டிங் :

சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு பிரமாதம். ஒவ்வொரு காட்சியையும் தன்னுடைய சிறப்பான ஒளிப்பதிவால் உயிர் கொடுத்துள்ளார். ஸ்ரீஜித் சாரங்கின் எடிட்டிங் படத்தை போர் இல்லாமல் கொண்டு செல்கிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த ஹீரோ, அதுவும் 3D படம் – இது சூப்பர் அப்டேட்.!

தம்ப்ஸ் அப் :

1. படத்தின் கதை
2. கதைக்களம்
3. விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நடிப்பு
4. ஜஸ்டின் பிரபாகரனின் இசை

தம்ப்ஸ் டவுன் :

1. இளசுகளுக்கு இப்படம் புதிய காதல் கீதம், கொஞ்சம் வயதானவர்களுக்கு கொஞ்சம் போர் அடிக்கலாம்.

மொத்தத்தில் டியர் காம்ரேட் இன்றைய காதலர்கள் பார்க்க வேண்டிய படம். உண்மையான காதலை உணர்த்தும் படம்.

REVIEW OVERVIEW
டியர் காம்ரேட் விமர்சனம்
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.
dear-comrade-reviewமொத்தத்தில் டியர் காம்ரேட் இன்றைய காதலர்கள் பார்க்க வேண்டிய படம். உண்மையான காதலை உணர்த்தும் படம்.