DD Takes Corona Vaccine

கொரானா தடுப்பூசி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தொகுப்பாளினி டிடி.

DD Takes Corona Vaccine : தமிழ் சினிமாவில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. திருமணம் செய்து கொண்ட ஒரு வருடத்திலேயே விவாகரத்து செய்து விட்ட இவர் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் தீவிரமாக பரவி வரும் கொரானா வைரஸ் தொற்றில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள கொரானா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளார்.

தான் ஏற்கனவே வேறு சில மருந்துகளை எடுத்து வருகிறேன். இதனால் கொரானா தடுப்பூசி எடுத்துக் கொள்ள மிகவும் பயந்தேன். பின்னர் மருத்துவரிடம் ஆலோசனை செய்வது தற்போதைய சூழ்நிலையில் கொரானா தடுப்பூசி மிக மிக அவசியம். மற்ற மாத்திரைகளை தற்போது நிறுத்தி வையுங்கள். தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள் என கூறினார்.

இதனையடுத்து தான் தடுப்பூசி எடுத்துக் கொண்டதாக டிடி தெரிவித்துள்ளார்.